பயணம்................

 நாம் எல்லோருக்கும் விருப்பமான ஒரு சம்பவம்.இந்த பயணம் மனித வாழ்கையில் சிறு குழந்தை பருவத்திலிருத்தே நம்மை பற்றிகொள்கிறது .சில பயணங்கள் நாம் மிகவும் விருப்பி மேற்கொள்ளும் பயணம் சிலவை நம் விருப்பத்திற்கு மாறாக நாம் மேற்கொள்ள வேண்டிய பயணங்கள்.பிறந்த போது மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு துவங்கும் பயணம்.நாம் இறந்த பிறகு நடைபெறும் அந்த இருகாட்டை நோக்கிய இறுதி பயணத்துடன் முடிவடைகிறது இந்த இரண்டிற்கும் இடையே யான வாழ்கை பலவிதமான பயணங்களை நாம் மேற்கொள்கிறோம்.ஆன்மீக பயணம் நாம் வாழும் வாழ்கை சூழ்நிலையிலிருத்து விலகி ஒரு அமைதியான ஒரு உணர்வை மனதுக்கு கொடுக்கிறது சந்தோசமான நிகழ்வுகளுக்காக செல்லுகின்ற பயணம் எப்போதுமே வயது விதியாசமில்லாமல்  அனைவரையும் குதுகலிக்க செய்கிறது.நம்முடைய எதிபார்ப்பை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் ஒரு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்துகிறது.இதை தவிர நம்முடைய வழக்கை சக்கரத்தை நகர்த்துவதற்காக தினமும் நாம் பணிக்கு சென்று திரும்பும் பயணம் என்பது ஒரே நிகழ்வாக இருப்பினும் ஒவ்வரு நாளும்  ஒவ்வரு உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றது.தெரிந்தே சில பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுகிறோம். இருப்பிரும் அவை நமக்கு சுகமாகவும் அமைவதுண்டு சோகமாகவும் அமைந்துவிடுவதும் உண்டு.கனவு பயணம், நினைவு பயணம் என்று நம் வாழ்கையில் கலந்து விட்ட இந்த பயணங்கள் ஒரு கால கட்டத்தில் நமக்கு அதான் மீதிருந்த ஒரு ஈர்ப்பை குறைந்து விடுகின்றான்.நம்முடைய வயதை பொறுத்து பயணத்தை தவிர்ப்பதற்க்கே நாம் முயல்கின்றோம். ஒரு காலத்தில் நாம் மிகவும் விரும்பிய இந்த பயணம் நம்முடைய வயதான காலக்களில் நாம் வெறுக்க துவக்குகிறோம்.அதன் பின் நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பணிக்கும் ஒரே பயணம் நம்முடைய இறுதி பயணம் தான். அந்த பயணத்தின் உணர்வுகளை நாம் பிறருக்கு அளித்து விட்டு எந்த வித சலனமும் இல்லாமல் பயணிக்கிறோம்.